BREAKING NEWS
latest

Friday, October 22, 2021

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆவணம் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்ற போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆவணம் டிஜிட்டல் முறைக்கு மாற்ற திட்டம்

Image : Kuwait Traffic Police

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆவணம் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்ற போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆவணங்களை இணைத்து My Identity(எனது அடையாளம்) Application மாதிரியில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் எனது அடையாளம் Application னுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆவணம் குவைத் மொபைல் ஐடி Application னுடன் இணைக்கவோ அல்லது இதற்காக புதிய Application ஐ வடிவமைக்கவோ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆவணம் போன்றவை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றுவதன் மூலம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரும் காகித ஆவணங்களை கைவசம் வைத்திருப்பதைத் தவிர்க்கலாம். இது தவிர, போக்குவரத்து விதிமீறல் குறித்து கட்டுபாட்டு அறையில் இருந்து குறுஞ்செய்திகள் மூலம் அறிவிப்பு வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆவணம் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்ற போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது

« PREV
NEXT »