BREAKING NEWS
latest

Wednesday, September 8, 2021

குவைத் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்னர் அனைத்து பயணிகளும் Shlonik செயலியை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்

Image : Kuwait Airport

குவைத் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளனர்.

1) அனைத்து பயணிகளும் குவைத் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு Shlonik செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று குவைத் விமான நிலைய அதிகாரிகள் இன்று(08/09/21) மதியம் வெளியிட்டுள்ள புதிய செய்தியில் தெரிவித்துள்ளனர். Shlonik ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலி Link பின்வருமாறு:

• ஆன்ட்ராய்டு செயலி link : https://shortest.link/SJx

• ஆப்பிள் செயலி link : https://shortest.link/Uv3

2) குவைத் சுகாதரத்துறை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த பயணிகள் குவைத் திரும்புவதற்காக பயணத்தின் போது எடுத்து வருகின்ற தடுப்பூசி சான்றிதழில் QR-CODE கண்டிப்பாக இருக்க வேண்டும். QR-CODE இல்லாத தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சான்றிதழை சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒப்புதலுக்காக பதிவேற்றி சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெறவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

3) விமான நிலையத்தில் முககவசம் அணிதல் பயணிகளுக்கு இடையேயான 2 மீட்டர் இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளும் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4) அதே நேரத்தில், விமான நிலையத்தின் தினசரி இயக்க திறன் 10000 இல் இருத்து 15000 அதிகரிக்க வேண்டும் என்ற சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளின் கோரிக்கை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து வருகின்ற பயணிகளுக்கான விமான பயணச்சீட்டு கட்டணம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »