BREAKING NEWS
latest

Wednesday, June 9, 2021

குவைத்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி இன்று துவக்கியது;உங்களுக்கு குறுந்தகவல் வந்ததா....????

குவைத்தில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது

Image : தடுப்பூசி மையம்

குவைத்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி இன்று துவக்கியது;உங்களுக்கு குறுந்தகவல் வந்ததா....????

குவைத்தில் Oxford Astra Zeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெறுவதற்காக இதுவரை குறுஞ்செய்தி கிடைக்காதவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட நேரத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்பை(Message link) பயன்படுத்தி தகவல்களைப் பெறலாம். இந்த link-யில் இரண்டாவது டோஸ் பெறும் இடம், நாள் மற்றும் நேரம் பற்றிய தகவல்களை பெற முடியும். இன்று(09/06/21 புதன்கிழமை முதல் இரண்டாவது டோஸ் வழங்கும் பணிகள் துவங்கவுள்ளதாக சுகாதாரதுறை செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது டோஸ் பெற ஏற்கனவே பலருக்கும் குறுஞ்செய்திகளை(Message) அனுப்பியுள்ளதாக குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது Astra Zeneca தடுப்பூசியின் தட்டுப்பாடு காரணமாக, பல்வேறுபட்ட முயற்சிகளுக்கு பிறகு மூன்றாவது Batch தடுப்பூசியை நேற்று குவைத் வந்தடைந்தது. நாட்டில் மேற்குறிப்பிட்ட தடுப்பூசி வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முதல் டோஸ் பெற்று இரண்டாவது டோஸுக்காகக் பலரும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி இன்று துவக்கியது;உங்களுக்கு குறுந்தகவல் வந்ததா....????

« PREV
NEXT »