BREAKING NEWS
latest

Wednesday, May 19, 2021

சவுதியில் தடுப்பூசி போடாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் பின்வரும் இடங்களில் நுழைய அனுமதி இல்லை

சவுதியில் தடுப்பூசி போடாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் பின்வரும் இடங்களில் நுழைய அனுமதி இல்லை என்று உள்துறை அமைச்சகம் நே‌ற்று தெளிவுபடுத்தியுள்ளது

சவுதியில் தடுப்பூசி போடாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் பின்வரும் இடங்களில் நுழைய அனுமதி இல்லை

சவுதியில் தடுப்பூசி போடாதவர்கள் ஆகஸ்ட்-1,2021 முதல் பின்வரும் இடங்களில் செல்ல முடியாது என்ற புதிய விதிகளை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் ஆகஸ்ட் முதல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சகம் நே‌ற்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே பின்வரும் பகுதிகளுக்குள் ஆகஸ்ட்-1,2021 முதல் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  1. எந்தவொரு பொருளாதார, வணிக, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு இடங்களில் நுழைய முடியும்.
  2. எந்தவொரு கலாச்சார, அறிவியல், சமூக அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியும்.
  3.  வேலைவாய்ப்பு அல்லது தணிக்கைக்கு எந்தவொரு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் நுழைய முடியும் 
  4. எந்தவொரு அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனத்தில் நுழைய முடியும் 
  5. பொது போக்குவரத்தை பயன்படுத்த கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகஸ்ட் முதல் கட்டாயமாக இருக்கும்.

கூடுதலாக, தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் தவாக்கல்னா செயலியை பயன்படுத்தவும், முகமூடி அணிவது, சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கைகளை கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்வது போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் உள்துறை அமைச்சகம் அனைத்து குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் நினைவூட்டியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் தடுப்பூசி போடாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் பின்வரும் இடங்களில் நுழைய அனுமதி இல்லை

« PREV
NEXT »