BREAKING NEWS
latest

Monday, May 17, 2021

குவைத்தில் வணிக வாளகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்;5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் வணிக வாளகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்;மேலும் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Image : விபத்து நடந்த வணிக வளாகம்

குவைத்தில் வணிக வாளகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்;5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் 10 மணியளவில் ஜஹ்ரா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் இறந்ததாக தீயணைப்பு துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் சிக்கியிருந்த ஐந்து தொழிலாளர்களை மீட்க முடிந்தது என்றும், 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு பத்திரிகை அறிக்கையில் தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தீ விபத்தால் ஏற்பட்ட அடர்த்தியான புகையின் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொழிலாளர்கள் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வணிக வாளகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்;5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

« PREV
NEXT »