BREAKING NEWS
latest

Monday, May 17, 2021

குவைத்தில் 14-வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

குவைத்தில் 14-வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் 14-வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

குவைத்தின் Jaber Al-Ahmad பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 14-வயது சிறுமி ஒருவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அவருடைய தந்தை உள்துறை அமைச்சகத்தின் அவசரகால உதவி மையத்திற்கு அழைத்து தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சிறுமி குவைத் குடிமகள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வீட்டின் ஹாலில் இருந்த சிறுமியை தீடீரென காணாதநிலையில் 2 மணிநேரங்களுக்கும் மேலான பல்வேறு இடங்களில் தேடிய பிறகு. வீட்டில் உள்ள கழிவறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு பலமுறை அழைத்தும் பதில் தராத நிலையில் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்று தந்தை கொடுத்துள்ள முதல்கட்ட வாக்குமூலத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரண‌ம் குறித்து விசாரனை துவங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 14-வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

« PREV
NEXT »