BREAKING NEWS
latest

Tuesday, May 18, 2021

இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட சவுதி குடும்பம்;தனி விமானம் மூலம் தாயகம் அழைத்து செல்லப்பட்டனர்

இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட சவுதி குடும்பம்;மன்னர் உத்தரவின் அடிப்படையில் தனி விமானம் மூலம் சவுதி அரேபியாவுக்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்

Image credit: Official Soure

இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட சவுதி குடும்பம்;தனி விமானம் மூலம் தாயகம் அழைத்து செல்லப்பட்டனர்

இந்தியாவுக்கு வந்த நிலையில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சவுதி குடும்பம் இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக சவுதிக்கு கொண்டு வரப்பட்டனர் என்ற சவுதி பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. சவுதி மன்னர் சல்மானின் உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவை பிரிவு விமானம் மூலம் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றது.

சவுதியில் இருந்து கிளம்பிய மருத்துவ விமானம் 15 மணி நேரத்தில் அனைத்து நடவடிக்கையும் முடித்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் கிங் சல்மான் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தது எனவும், பாதிக்கப்பட்ட நபர்களின் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 74 க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இதுபோல் எந்த விதமான வைரஸ் பாதிப்பும் இல்லாமல் இதுவரையில் சவுதிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டது கவனிக்கத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட சவுதி குடும்பம்;தனி விமானம் மூலம் தாயகம் அழைத்து செல்லப்பட்டனர்

« PREV
NEXT »