BREAKING NEWS
latest

Sunday, April 4, 2021

குவைத்தில் முதலாளியை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

குவைத்தில் முதலாளியை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்;இதற்காக காரணம் தெரியவில்லை

குவைத்தில் முதலாளியை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

குவைத்தின் அல்-சலாம் பகுதியில் உள்ள குவைத்தியின் வீட்டில் வைத்து முதலாளியை(Sponsore) தாக்கிவிட்டு கொலை செய்யும் முயற்ச்சியில் பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வீட்டுத் தொழிலாளியை போலிசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 61-வயதான குவைத்தி பெண்மணியை வங்காளதேச நாட்டை சேர்ந்த அவருடைய வீட்டுத் ஊழியர் நான்கு முறை கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி பலமாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார் எனவும், இதில் முகத்தில் படுகாயமடைந்த அந்த பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் முபாரக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடு்த்து குற்றவாளிக்கு எதிராக அல்-சித்திக் காவல் நிலையம் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றதாகவும் அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.பெண்மணியை பல முறை குத்தி கொலை செய்ய முயற்சி செய்யும் அளவுக்கு அந்த நபர் செல்வதற்காக காரணம் குறித்து எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் முதலாளியை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

« PREV
NEXT »