BREAKING NEWS
latest

Monday, March 22, 2021

குவைத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும்;மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும் அமைச்சரை அனுமதி வழங்கியது

குவைத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும்; மாணவர்களுக்கு தேர்வு நடத்த இன்றைய நடைபெற்ற அமைச்சரை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது

குவைத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும்;மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும் அமைச்சரை அனுமதி வழங்கியது

குவைத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்த இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது.தேர்வுகள் வருகின்ற மே-30 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற செப்டம்பர்-19 முதல் மீண்டும் பள்ளிகளுக்கு மாணவர்களை படிப்படியாக அனுமதிக்கவும், இதன் மூலம் பள்ளிகளின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னர் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கும் பள்ளிகளின் செயல்பாட்டுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர கல்விதுறை அமைச்சகம் சமர்ப்பித்த திட்டத்திற்கே தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கல்வி துறை அமைச்சகம் தேர்வுகள் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும்;மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும் அமைச்சரை அனுமதி வழங்கியது

« PREV
NEXT »