BREAKING NEWS
latest

Monday, March 22, 2021

குவைத்தில் கோவிட் தடுப்பூசி பெற்ற 3 பிரிவினருக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

குவைத்தில் கோவிட் தடுப்பூசி பெற்ற 3 பிரிவினருக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

குவைத்தில் கோவிட் தடுப்பூசி பெற்ற 3 பிரிவினருக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

குவைத்தில் கோவிட் தடுப்பூசி பெற்ற மூன்று பிரிவினருக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு,இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற இரண்டு வாரங்கள் கடந்த நபர்கள், தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்ற ஐந்து வாரங்களுக்கும் மேல் கடந்த நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட பிறகு தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்து இரண்டு வாரங்களுக்கும் மேலான நபர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அவர்கள் குவைத் வந்த பிறகு ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். ஒரு வாரம் கழித்து பி.சி.ஆர் சோதனை செய்து கோவிட் பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் பெறப்பட வேண்டும். இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த நிபந்தனைகள் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கோவிட் தடுப்பூசி பெற்ற 3 பிரிவினருக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

« PREV
NEXT »