BREAKING NEWS
latest

Wednesday, March 10, 2021

குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்;உடல் இன்று தாயகம் சென்றடைந்தது

குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்;உடல் இன்று காலையில் சென்னை சென்றடைந்தது

Image : உயிரிழந்த ஏழுமலை(வயது-58)

குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்;உடல் இன்று தாயகம் சென்றடைந்தது

குவைத்தில் இந்தியா,தமிழகம்,சென்னை,புதிய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது-58),இவருடைய தந்தை பெயர் கன்னியப்பன் என்பதாகும். ஏழுமலை கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறு(07/03/21) அன்று திடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து குவைத் சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முடிக்கப்பட்டு நேற்று(09/03/21) மாலையில் அல்- ஜசீரா விமானம் மூலம் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து உடல் இன்று காலையில் சென்னை விமான நிலையம் சென்றடைந்தது. அங்கிருந்து அவருடைய சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இதற்காக நடவடிக்கைகளை மக்கள் சேவை மைய நிர்வாகிகள் செய்தனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்;உடல் இன்று தாயகம் சென்றடைந்தது

« PREV
NEXT »