BREAKING NEWS
latest

Tuesday, March 23, 2021

குவைத்தில் பணிப்பெண் தற்கொலை;தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்

குவைத்தில் பணிப்பெண் தற்கொலை;தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் பணிப்பெண் தற்கொலை;தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்

குவைத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 31-வயதான வீட்டுப் பணியாளர் ஒருவர் ஸ்பான்சரின் வீட்டில் துண்டு பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் Waha பகுதியில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. வீட்டுப் பணிப்பெண் ஒருபோதும் எந்தவொரு பிரச்சினையையும் தன்னுடைய வீட்டில் சந்திக்கவில்லை என்று ஸ்பான்சர்(அரபி) போலீசாரிடம் கூறினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் தற்கொலைக்கு பின்னால் உள்ள காரண‌ம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுபோல் மூன்று நாட்களுக்கு முன்பு குவைத் தலைநகரின் Abdullah Al Salem பகுதியில் உள்ள தனது ஸ்பான்சர்(அரபி) வீட்டின் கழிப்பறையில் பிலிப்பைன்ஸ் பணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறி்ப்பிடத்தக்கது. இந்த தற்கொலை குறித்த விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் மீண்டும் மற்றொரு பணிப்பெண் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பணிப்பெண் தற்கொலை;தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்

« PREV
NEXT »