BREAKING NEWS
latest

Tuesday, March 16, 2021

குவைத்தில் கொரோனா காலத்தில் வாகனத்தில் இருந்த படியே பாதுகாப்பாக PCR பரிசோதனை செய்யலாம்

குவைத்தில் கொரோனா காலத்தில் வாகனத்தில் இருந்த படியே பாதுகாப்பாக PCR பரிசோதனை செய்யலாம் என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Image : பரிசோதனை எடுக்கும் காட்சி

குவைத்தில் கொரோனா காலத்தில் வாகனத்தில் இருந்த படியே பாதுகாப்பாக PCR பரிசோதனை செய்யலாம்

குவைத்தில் நீங்கள் இந்த கொரோனா காலத்தில் மிகவும் பாதுகாப்பாக நீங்கள் செல்கின்ற வாகனத்தில் இருந்த படியே PCR பரிசோதனை செய்யலாம் என்று ஃபர்வானியாவில் உள்ள பதர்-அல்-சமா மருத்துவமனை(Badr Al Samaa Medical Centre, Farawaniya) அறிவித்துள்ளது. இந்த சேவை தினமு‌ம் காலை 6:00 மணி முதல் மாலை 06:00 மணி வரையில் கிடைக்கும்.

இது கொரோனா அதிக அளவில் பரவி வருகின்ற நிலையில் தாயகம் திரும்பும் நபர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக ஒரு சேவையாக அமையும்.மேலும் 24 மணிநேரத்தில் PCR பரிசோதனை முடிவு உங்களுக்கு கிடைக்கும். இந்த சேவைக்காக 28 தினார்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 60689323 என்ற WhatsApp எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா காலத்தில் வாகனத்தில் இருந்த படியே பாதுகாப்பாக PCR பரிசோதனை செய்யலாம்

« PREV
NEXT »