BREAKING NEWS
latest

Tuesday, March 30, 2021

குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விசா புதுப்பிக்க 2000 தினார் கட்டணம் மற்றும் 500 தினார் காப்பீடு என்ற நிபந்தனைகள்

குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விசா புதுப்பிக்க 2000 தினார் கட்டணம் மற்றும் 500 தினார் காப்பீடு உள்ளிட்ட புதிய விதிமுறைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள Proposal-யில் இடம்பெற்றுள்ளது

குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விசா புதுப்பிக்க 2000 தினார் கட்டணம் மற்றும் 500 தினார் காப்பீடு என்ற நிபந்தனைகள்

குவைத்தில் 60-வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான பணி அனுமதிப் பத்திரத்தை(Work Permit) புதுப்பிக்க மனிதவள ஆணையம் நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அதன்படி தொழிலாளர் விவகாரங்களின் இறுதி முடிவு எடுக்கும் உச்சகுழு கவுன்சிலுக்கு 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி டிப்ளோமா அல்லது அதற்குக் குறைவானவர்களின் பணி அனுமதிகளை புதுப்பிப்பதற்கான திட்டம் தொடர்பான Proposal சமர்ப்பிக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கான பணி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க 2000 தினார் கட்டணம் வசூலிப்பதே முக்கிய முன்மொழிவு, அதுபோல் தற்போதுள்ள காப்பீட்டு பிரீமியத்துடன் கூடுதலாக, 500 தினார்களின் சிறப்பு சுகாதார காப்பீடும் சேர்க்கப்பட வேண்டும்.இந்த திட்டங்கள் மனிதவள ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மனிதவள ஆணையத்தின் கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் இந்த திட்டங்களுக்கு உடன்பட்டதாக அறியப்படுகிறது. இருப்பினும், இப்போது முன்மொழியப்பட்ட கட்டணத்தையும் வாரியம் குறைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த புதிய விதியின்படி அனுமதி வழங்கப்பட்டாலும் இவ்வளவு செலவு(2000+ இன்சூரன்ஸ்+கூடுதலான இன்சூரன்ஸ் 500) செய்து விசா புதுப்பித்தல் செய்தாலும், அவர்கள் விசா கட்டணத்தை தவிர்த்து கணக்கிடும் போது எ‌வ்வளவு ரூபாய் வருடத்திற்கு சம்பாதிக்க முடியும் என்பதும் கேள்விகளையே....?????

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விசா புதுப்பிக்க 2000 தினார் கட்டணம் மற்றும் 500 தினார் காப்பீடு என்ற நிபந்தனைகள்

« PREV
NEXT »