BREAKING NEWS
latest

Tuesday, March 30, 2021

சவுதியில் பணியிடத்தில் இன்று நடந்த விபத்தில் மூன்று வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர்

சவுதியில் பணியிடத்தில் இன்று நடந்த விபத்தில் மூன்று வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அங்கிருந்து வெளியாகியுள்ளது

சவுதியில் பணியிடத்தில் இன்று நடந்த விபத்தில் மூன்று வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் கட்டுமான இடத்தில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அல் நசீம் மாகாணத்தில் நடந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டு வருகின்ற குடியிருப்பின் வேலைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் இடிந்து விழுந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூன்று தொழிலாளர்களும் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அஜீசியா போலீசார் விபத்து குறித்து வாக்குப்பதிவு செய்த பின்னர் உடல்கள் பிணவறைக்கு மாற்றப்பட்டன. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் பணியிடத்தில் இன்று நடந்த விபத்தில் மூன்று வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர்

« PREV
NEXT »