BREAKING NEWS
latest

Tuesday, March 30, 2021

சவுதியில் சில தினங்களுக்கு முன்பு குழந்தையினை நாய்கள் கடித்துக் கொன்ற நிலையில்;இன்று இந்தியரை நாய்கள் கடித்துக் குதறியது

சவுதியில் சில தினங்களுக்கு முன்பு குழந்தையினை நாய்கள் கடித்துக் கொன்ற நிலையில்;இன்று இந்தியரை நாய்கள் கடித்து குதறியது என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image : Saudi Road

சவுதியில் சில தினங்களுக்கு முன்பு குழந்தையினை நாய்கள் கடித்துக் கொன்ற நிலையில்;இன்று இந்தியரை நாய்கள் கடித்துக் குதறியது

சவுதி அரேபியாவின் உள்ள தபூக்கில் இன்று(29/03/21) நடந்த தெரு நாய் தாக்குதலில் இந்திய நபர் ஒருவர் பலத்த காயமடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த இமான் அல் ஹுசைன் மூன்று நாய்களால் தான் பயங்கரமாக தாக்கப்பட்டதாகக் கூறினார். அவரை இரண்டு கால்களிலும் நாய்கள் கடித்து குதறியது. இன்று காலை 11:00 மணியளவில் அவர் நாய்களால் தாக்கப்பட்டார்

இந்த சம்பவத்தை நேரில் கண்ட சில இளைஞர்கள் இந்தியரை நாய்களிடமிருந்து மீட்டனர். அவர் சிகிச்சைக்காக கிங் ஃபஹத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த மார்ச்-15 ஆம் தேதியில் நாய்கள் கடித்து குதறியதில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த தகவலை வெளியான செய்தியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரியாத் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள Washala பகுதியில் இந்த சோகமான சம்பவம் நடந்தது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் சில தினங்களுக்கு முன்பு குழந்தையினை நாய்கள் கடித்துக் கொன்ற நிலையில்;இன்று இந்தியரை நாய்கள் கடித்துக் குதறியது

« PREV
NEXT »