BREAKING NEWS
latest

Tuesday, March 30, 2021

குவைத் சீரியல் நடிகை அபீர் அல் கோடர் அவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத் சீரியல் நடிகை அபீர் அல் கோடர் அவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : நடிகை அபீர் அல் கோடர்

குவைத் சீரியல் நடிகை அபீர் அல் கோடர் அவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத் சீரியல் நடிகை அபீர் அல்-கோடர் கொரோனா காரணமாக இன்று(29/03/21) பத்ரியா அல்-அஹ்மத் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு புற்றுநோய் இருப்பது சமீபத்திய காலத்தில் கண்டறியப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளன. பிரபலமான எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஃபஜ்ர் சயீத் எழுதிய அப்ரோதர் என்ற நாடகத்தில் 2006-யில் அறிமுகமானார்.

பின்னர் அவர் பல சீரியல்களிலும் நாடகங்களிலும் நடித்தார். இரு தினங்களுக்கு முன்பு நோயின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து அபீர் அல்-கோடர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி கடையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடிகரான மிஷரி-அல்-பாலம் உயிரிழந்த பிறகு அபீர் அல்-கோடர் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சீரியல் நடிகை அபீர் அல் கோடர் அவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

« PREV
NEXT »