BREAKING NEWS
latest

Saturday, February 13, 2021

துபாயில் சிக்கியுள்ள நபர்கள் கவனத்திற்கு தங்குமிடம் மற்றும் உணவு தயார்;விரும்பினால் உறவுகள் தொடர்பு கொள்ளலாம்

துபாயில் சிக்கியுள்ள நபர்கள் கவனத்திற்கு தங்குமிடம் மற்றும் உணவு தயார்;விரும்பினால் உறவுகள் தொடர்பு கொள்ளலாம் என்ற மனிதாபிமான செய்தி வெளியாகியுள்ளது

Image: Saji with UAE Prime Minister

துபாயில் சிக்கியுள்ள நபர்கள் கவனத்திற்கு தங்குமிடம் மற்றும் உணவு தயார்;விரும்பினால் உறவுகள் தொடர்பு கொள்ளலாம்

சவுதி மற்றும் குவைத் திரும்புவதற்கான பயணத்தின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களிடம் தாயகம் திரும்புவதற்கான அரசாங்கம் கூறும்போது, ஆதரவு கரம் நீட்டியுள்ளார் கயம்குளத்தைச் சேர்ந்த சஜி செரியன் என்ற இந்தியர். அவர் ஏற்கனவே புஜைராவில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு தொழிலாளர் முகாமில் சுமார் 200 பேருக்கு தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்து அடைக்கலம் கொடுத்துள்ளார். பயணத் தடை நீக்கப்படும் வரை துன்பத்தில் இருப்பவர்கள் அரவணைப்பேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள எவரும் சஜிச்சேரியனை தொடர்பு கொள்ளலாம். புஜைராவில் உள்ள இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கலாம் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் பண வசதி இல்லாமல் சிலர் வீடு திரும்புவதற்காக சிரமப்பட்டு வருகிறார்கள் அவர்கள் 0557260808 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த செய்தியை அருன் ராகவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாயில் சிக்கியுள்ள நபர்கள் கவனத்திற்கு தங்குமிடம் மற்றும் உணவு தயார்;விரும்பினால் உறவுகள் தொடர்பு கொள்ளலாம்

« PREV
NEXT »