BREAKING NEWS
latest

Saturday, February 13, 2021

குவைத்தில் 356 வெளிநாட்டு மது பாட்டில்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்

குவைத்தில் 356 வெளிநாட்டு மது பாட்டில்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவல்களை உள்துறை அமைச்சகம் செய்தியாக வெளியிட்டுள்ளது

Image : Arrested Man with Alcohol Bottles

குவைத்தில் 356 வெளிநாட்டு மது பாட்டில்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்

குவைத் ஹவாலி கவர்னரேட் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தியில் இறக்குமதி செய்யப்பட்ட 356 மது பாட்டில்கள் கைவசம் வைத்திருந்த ஒரு சட்டவிரோத குடியிருப்பாளரை கைது செய்ய முடிந்தது என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலைமையில் ஹவாலி பகுதியில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒரு ரோந்து வாகனத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது 3 பேர் ஒரு வாகனத்திலிருந்து இன்னொரு வாகனத்திற்கு பைகளை எடுத்து மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர் எனவும், பாதுகாப்பு அதிகாரிகளை பார்த்ததும், அவர்கள் பைகளை எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், அதிகாரிகள் துரத்தியதில் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனத்திற்குள் மறைத்து வைத்திருந்த 356 இறக்குமதி செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் பிதூனி என்பதும்,இதையடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்பட்டுள்ளது. இவருடைய கூட்டாளிகளை அதிகாரிகள் தேடி வருகி்ன்றனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 356 வெளிநாட்டு மது பாட்டில்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்

« PREV
NEXT »