BREAKING NEWS
latest

Sunday, February 28, 2021

சவுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து 3 இந்தியர்கள் பலி

சவுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து 3 இந்தியர்கள் பலி;மேலும் 5 செவிலியர்கள் காயமடைந்தனர் விபத்தில் சிக்கிய அனைவரும் இந்தியர்கள்

Image credit: விபத்தில் உயிரிழந்த செவியர்கள்

சவுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து 3 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை பேருந்து கவிழ்ந்து நடந்த பயங்கரமான விபத்தில் 2 செவிலியர் மற்றும் வாகன ஓட்டுநர் உட்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த செவியர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். சவுதியின் மேற்கு நகரமான தைஃப்பில் இன்று(28/02/21) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செவிலியர்கள் பயணம் செய்த பேருந்து பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. செவிலியர்கள் ரியாத்தில் இருந்து ஜித்தாவுக்கு செல்லும் வழியில் இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் விபரங்கள் தெரியவந்துள்ளது. உயிரிழந்த செலியர்களில் ஒருவர் பெயர் அகிலா(வயது-29) மற்றொருவர் பெயர் சுபி(வயது-33) மற்றும் பலியான ஓட்டுநர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. வாகனத்தில் டிரைவர் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர். காயமடைந்த ஐந்து செவிலியர்களில்,கேரளாவை சேர்ந்த நான்சி மற்றும் பிரியங்கா என்ற இரண்டு செலியர்கள் தைஃப் கிங் பைசல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,தமிழகத்தை சேர்ந்த ருமியா குமார், குமுதா ஆறுமுகன் மற்றும் ரஜிதா ஆகியோர் தைஃப் பிரின்ஸ் சுல்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களின் காயங்கள் ஆபத்தான நிலையில் இல்லை. இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டிரைவர் தூங்கிவிட்டாதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.செவிலியர்கள் இந்த மாதம் 3-ஆம் தேதி இந்தியாலில் இருந்து விடுமுறையினை முடித்து மீண்டும் ரியாத்துக்கு வந்தனர். அங்கிருந்து, தங்களின் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துவிட்டு ஜித்தாவின் பல்வேறு மருத்துவமனைகளில் மீண்டும் வேலைக்காக சேருவதற்காக சென்ற நிலையில் இந்த எதிர்பார்க்காத துயரம் ஏற்பட்டுள்ளது.உயிரிழந்த 2 செலியர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து 3 இந்தியர்கள் பலி

« PREV
NEXT »