BREAKING NEWS
latest

Friday, January 22, 2021

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விசா மாற்றம் பெறுவதற்கு டிகிரி அல்லது டிப்ளமோ கட்டாயமாக்க முடிவு

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விசா மாற்றம் பெறுவதற்கு டிகிரி அல்லது டிப்ளமோ கட்டாயமாக்க முடிவு;குவைத் தொழிற்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய முடிவு என்று தெரிகிறது

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விசா மாற்றம் பெறுவதற்கு டிகிரி அல்லது டிப்ளமோ கட்டாயமாக்க முடிவு

குவைத்தில் வேலை செய்து வருகின்ற தொழிலாளி ஒருவருக்கு மற்றொரு வேலை கிடைக்கும் பட்சத்தில் விசா மாற்றம் செய்யவோ அல்லது Work Permit புதுப்பித்தல் செய்யவோ,குறிப்பிட்ட நபருக்கு அதற்கு தேவையான கல்வித்தகுதி தேவை என்ற புதிய விதிமுறையை கொண்டுவர தொழிற்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக 34 பிரிவுகளில் இந்த புதிய விதிமுறை நடைமுறையில் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், குடிமக்களை வேலைக்கு அமர்த்தும் திட்டம் மற்றும் தகுதியான நபர்கள் மட்டுமே வேலைக்கு போதும் என்ற குவைத் தொழிற்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய முடிவு என்று தெரிகிறது.

ஆசிரியர்கள்,மருத்துவர்கள்,பத்திரிகையாளர்கள், நீதித்துறை ஊழியர்கள், மேனேஜர், தனிப்பட்ட துறையில் வல்லுநர்,டெக்னீசியன் உள்ளிட்ட 34 துறைகளில் புதிய முடிவு முதல்கட்டமாக கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த துறைகளில் தேவையான கல்வித்தகுதி இல்லாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அமைச்சகத்தின் இந்த புதிய முடிவு கட்டாயமாக்கபட்டு நடைமுறையில் வந்தால் பலர் விசா புதுப்பித்தல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மேலும் குவைத்தில் எஞ்சினியர் துறையில் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்ற தகுதி தேர்வு தனியார் துறையின் பிற துறைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் நடத்துவது தொடர்பாக நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவு‌ம் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடைய 70 வயது முதலான உயர் கல்வி தகுதி உள்ள நபர்களின் விசாவும் இனிமுதல் புதுப்பித்தல் செய்ய வேண்டாம் என்ற முடிவு கடந்த தினங்களில் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை இழந்து வருகின்ற நிலையில் வளைகுடா நாடுகள் புதிதாக கொண்டு வருகின்ற இதுபோன்ற புதிய விதிமுறைகள் காரணமாக, அவர்கள் தற்போது செய்து வருகின்ற வேலையும் பறிபோகுமோ....??? என்ற அச்சத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயப்பட வேண்டியதாக உள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விசா மாற்றம் பெறுவதற்கு டிகிரி அல்லது டிப்ளமோ கட்டாயமாக்க முடிவு

« PREV
NEXT »