BREAKING NEWS
latest

Friday, January 22, 2021

குவைத்திற்கு வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

குவைத்திற்கு வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்;ஜனவரி 24 முதல் பிப்ரவரி 6 வரை குவைத் வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதாக அறிவித்துள்ளது

Image credit: Kuwait Airways

குவைத்திற்கு வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

குவைத் ஏர்வேஸ் சுகாதார அதிகாரிகள் மற்றும் சிவில் ஏவியேஷன் பொது நிர்வாகத்தின் உத்தரவுப்படி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 6 வரை குவைத் வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதாக அறிவித்துள்ளது. குவைத்தில் புதிய கோவிட் -20 உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஒவ்வொரு விமானத்திலும் 35 பயணிகள் வருவார்கள் எனவும், குவைத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் சாதாரணமாக எப்பொதும் போல பயணிகள் புறப்பட்டு செல்வார்கள் எனவும்,அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் தினசரி நாளிதழ், மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் குவைத் ஏர்வேஸ் நிறுவனம் குவைத்திற்கு வருகின்ற வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் Transit பயணிகளுக்கு இந்த முடிவிலிருந்து விலக்கு அளித்ததாக தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திற்கு வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

« PREV
NEXT »