BREAKING NEWS
latest

Friday, January 8, 2021

குவைத்தில் நீதிமன்றக் கோப்புகளின் நகல்களை விற்ற வழக்கில் 4 வெளிநாட்டவர்கள் கைது

குவைத்தில் லஞ்சம் வாங்கி அதற்கு ஈடாக நிலுவையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் ஆவணங்கள் மற்றும் வழக்கு கோப்புகளை புகைப்படம் எடுத்து வெளியே விற்ற வழக்கில்  4 பேரை குற்றவியல் புலனாய்வு பொது நிர்வாகம் அதிகாரிகள்  கைது செய்தது.

உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடகத்துறை பொது நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இரகசிய விசாரணையில் ஒரு வழக்கறிஞர் பிரதிநிதி மற்றும் கூடுதலாக நீதிமன்றத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்கள் லஞ்சமாக பணம் வசூலிப்பதாகக் கண்டறியப்பட்டது மேலும் அதற்கு ஈடாக நீதிமன்ற வழக்கு கோப்புகளை புகைப்படம் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்து எனவும்,

மேலும் கூறுகையில், கிடைத்த தகவல்களை அடிப்படையில் விசாரித்து, அவர்கள் செய்யும் குற்றம் உறுதியான நிலையில்,சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியுடன் அவர்களை பிடிக்க அதிகாரிகள் வலைவிரித்தனர். இதற்காக இரகசிய பிரிவு அதிகாரிகளில் ஒருவர், வாடிக்கையாளர் என்ற போர்வையில் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான வழக்குஎண் உள்ளிட்ட தகவல்களையும்,ஒரு தொகை வழங்கினர், அந்த வழக்கு தொடர்பான ஆவண நகல்கள் தேவை என்று  குற்றவாளிகளை அணுகினர். அவர்கள் அந்த வழக்கு தொடர்பான அவணங்களின் எடுத்து வந்து வழக்கியோது மறைந்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் பிரதிவாதிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் அவர்கள்  பணத்திற்கு ஈடாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை புகைப்படம் எடுப்பதாகவும் ஒப்புக்கொண்டனர், இவர்களின் இருந்து மேலும் பல வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர்கள் குவைத்திகள் அல்லாத மற்ற அரபு தேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான கூடுதல் சட்ட  நடவடிக்கைகளை எடுக்க குற்றவியல் பிரிவு அதிகாரிகளிடம் 4 பேரையும் ஒப்படைத்தனர்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நீதிமன்றக் கோப்புகளின் நகல்களை விற்ற வழக்கில் 4 வெளிநாட்டவர்கள் கைது

« PREV
NEXT »