BREAKING NEWS
latest

Thursday, December 31, 2020

குவைத்தில் தமிழர் மாரடைப்பால் மரணம் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது


குவைத்தில் வேலை செய்து வந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பெயர் சேகர்(வயது-45) எனவும் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்,குடியான தெரு,கீழ சகடமங்களம்,அம்பாள் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய தந்தை பெயர் சின்னயன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான குவைத் மக்கள் சேவை மைய பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த(24-12-2020) அன்று மாரடைப்பால் உயிரிழந்த சேகர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இன்று(31/12/20) தான் எங்கள் கைவசம் கிடைத்தது எனவும், அதுவும் மனித உரிமை ஆர்வலர் ஆல்வின் ஜோஸ் முயற்சியில் ஆவணங்கள் கிடைத்த நிலையில் உடல் தாயகம் அனுப்பும் பணிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது எனவும்,இவரின் உடலை அனுப்புமாறு தாயகத்தில் உள்ள குடும்பத்தார்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழர் மாரடைப்பால் மரணம் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »