BREAKING NEWS
latest

Thursday, December 31, 2020

குவைத்தில் குடிமகனை கொலை செய்த வழக்கில் வெளிநாட்டு தொழிலாளி கைது

குவைத்தின் Farawaniya Governorate சரகத்திற்கு உட்பட குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறை பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மாலையில் அவசரகால உதவி மையத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில்  Khaitan பகுதியில் இருந்து 51-வயதான குவைத் குடிமகனின் உடலை கைப்பற்றினர். இதையடுத்து நடந்த ஆய்வில் சடலத்தில் இரத்தக்கறை மற்றும் 7 ஆழமான கத்தி குத்து காயங்கள் கண்டறியப்பட்டது.

மேலும் கொலை தொடர்பான நடத்தப்பட்ட விசாரணையில்  கொலையாளி தொழில்துறை(Industrial Area) பகுதியில் மறைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட பின்னர் நடத்திய விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் நிதி தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது என்று கூறினார். கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட தொழிலாளி எகிப்து நாட்டவர் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் குடிமகனை கொலை செய்த வழக்கில் வெளிநாட்டு தொழிலாளி கைது

« PREV
NEXT »