BREAKING NEWS
latest

Monday, December 28, 2020

குவைத்தில் இன்று குளிர்ந்த காலநிலை;பகலில் சிறிய மழைக்கு வாய்ப்பு

குவைத்தின் வானிலை ஆய்வு மையம் இன்று(28/12/20) வெளியிடப்பட்ட அறிக்கையில் பகல் நேரத்தில் குளிர்ந்த காலநிலையும், ஓரளவு மேகமூட்டமும் நிலவும் எனவும்,வடமேற்கு திசையில் இருந்து மிதமான காற்று மணிக்கு 10 - 32 கி.மீ  வரை வீசக்கூடும் எனவும், லேசான மழைக்கான வாய்ப்புள்ளதாக,இது குறிப்பாக நாட்டின் தெற்கு பிராந்தியங்களில் ஏற்படலாம்.

இரவைப் பொறுத்தவரை, குளிர் காலநிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்தது, மேலும் காற்று வடமேற்கு திசையிலிருந்து ஏற்ற இறக்கமாக மணிக்கு 08-28 கிமீ வேகம் வரையில் வீசக்கூடும்.

வெப்பநிலை:

நாட்டின் பிராந்தியங்களுக்கு ஏற்ப பகல் நேரத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை18 டிகிரி, இரவில் இது 10 டிகிரி வரையில்  குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று குளிர்ந்த காலநிலை;பகலில் சிறிய மழைக்கு வாய்ப்பு

« PREV
NEXT »