BREAKING NEWS
latest

Wednesday, December 30, 2020

குவைத்தில் பிரச்சனையில் உள்ள இந்தியர்களுக்கு இலவச ஆலோசனை தூதரகம் ஏற்பாடு


குவைத்தில் வேலைக்கு வந்து பல பிரச்சனைகளையும்,சிக்கல்களையும் சந்திக்கும் இந்தியர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்க,குவைத் இந்திய தூதரகம் முயற்சி செய்து சட்ட ஆலோசகர்களையும்,அவர்களின் தொடர்பு என்களையும் அறிவித்து இருக்கிறது.

தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய தூதரக வளாகத்தில் சட்ட உதவி மையம் நிறுவப்படுவதை தூதரகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.  எந்தவொரு விஷயத்திலும் சட்ட ஆலோசனையைப் பெற விரும்புவோர் ஒவ்வொரு சனிக்கிழமையும் 10.00-12.00 க்கு இடையில் சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.(காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை). வருகிற ஜனவரி 2, 2021 முதல் சட்ட உதவி மையம் சேவையை துவங்கும். 

எந்தவொரு விஷயத்திலும் இலவச சட்ட ஆலோசனையைப் பெற விரும்புவோர் cw.kuwait@mea.gov.in தூதரக மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று, தூதரகம் வழங்கும் நகலுடன் சட்ட உதவி மைய இந்திய வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களை தூதரகம் இணையதளத்தில் காணலாம்.

குவைத்தில உள்ள வழக்கறிஞர் அலுவலகங்களில் வேலை செய்யும்  இந்திய வழக்கறிஞர்களால் வழங்கப்படும் இந்த சேவை முற்றிலும் இலவசமாக ஆலோசனையாகும், மேலும் இவர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் உங்கள் பிரச்சினையின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க.  இதுபோன்ற பரிந்துரைகளால் எழும் எந்தவொரு எதிர் விளைவுகளுக்கும் இந்திய தூதரகம் பொறுப்பல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பிரச்சனையில் உள்ள இந்தியர்களுக்கு இலவச ஆலோசனை தூதரகம் ஏற்பாடு

« PREV
NEXT »