BREAKING NEWS
latest

Saturday, December 26, 2020

குவைத்தில் நேற்று பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டதாக வெளியான செய்தியை புரளி என்று அதிகாரிகள் மறுப்பு

Dec-26,2020

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(25/12/20) வெள்ளிக்கிழமை வணிக விமானங்கள் சேவைகள் எதற்கும் அனுமதி வழக்கப்படவில்லை என்று சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான நிர்வாகிகள் கூறுகையில் புதிய கொரோனா பரவல் காரணமாக எல்லைகள் மூடப்பட்ட பிறகு, தற்போது வரையில் நாட்டில் இருந்து பயணிகளை நோக்கமாகக் கொண்ட வணிக விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைப்பது தொடர்கிறது எனவும்,

மேலும் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் திரைகளில் தோன்றும் விமானங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது சரக்கு விமானங்கள் வருகை தொடர்பான அறிக்கைகள் என்று அதிகாரிகள் கூறினார்.

எனவே பொதுமக்கள் அதிகாரபூர்வ செய்திகளை ம‌ட்டுமே பின்தொடர வேண்டும் எனவும், தற்போதைய அறிக்கையில் எதாவது மாற்றம் வந்தால் அது அதிகாரபூர்வ தளத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நேற்று பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டதாக வெளியான செய்தியை புரளி என்று அதிகாரிகள் மறுப்பு

« PREV
NEXT »