BREAKING NEWS
latest

Monday, December 14, 2020

குவைத்திற்கு மீண்டும் தாயகத்தில் உள்ள தனியார் சுகாதாரத்துறை ஊழியர்கள் திரும்புவதற்கு அனுமதி:


Dec-14,2020

குவைத் சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தாயகத்தில் சிக்கித் தவிக்கும் தனியார் மருத்துவத் துறை தொழிலாளர்கள் திரும்பிவர அனுமதி வழங்கியுள்ளது.

குவைத் விமான நிலையத்தில் இருந்து இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது, இதில் குவைத்தில்  உள்ள தனியார் மருத்துவத் துறையில் பணியாற்றும்மருத்துவ ஊழியர்கள், நர்சிங் ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த துணைத்தொழில்கள் செய்யும் ஊழியர்கள்,குவைத்திற்கு நேரடியாக அல்லது இணைப்பு விமானங்கள்(direct or transit flights)மூலம் செல்லுபடியாகும் விசா(valid residency) வைத்திருக்கம் நபர்கள் நாட்டிற்குள் வரலாம் என்று அறிவித்துள்ளது.

(Note: புகைப்படம் தெளிவாா தெரிய அதன் மேல் ஒரு Click செய்யவும்)

"My Identity" செயலியை பதிவிறக்கம் செய்து குவைத் சுகாதார துறையின் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி குவைத்தில் நுழையலாம் என்று சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திற்கு மீண்டும் தாயகத்தில் உள்ள தனியார் சுகாதாரத்துறை ஊழியர்கள் திரும்புவதற்கு அனுமதி:

« PREV
NEXT »