BREAKING NEWS
latest

Sunday, December 13, 2020

சவுதியில் ஜிசிசி உச்சி மாநாடு ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது:

Dec-13,2020

பஹ்ரைனில் வைத்து இந்தமுறை நடைபெற வேண்டியிருந்த ஜிசிசி உச்சி மாநாடு ஜனவரி 5 ஆம் தேதி சவுதியில் நடைபெறுகிறது. தற்போது நிலவும் வளைகுடா நெருக்கடியை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும், இந்த உச்சிமாநாடு, ஜி.சி.சி அமைப்பின் தலைமை இடமான சவுதி அரேபியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவிட் நெருக்கடிக்கு இடையே நடைபெறும் உச்சிமாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று சவுதி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜிசிசி உச்சி மாநாடுகளை போன்று அல்லாமல், இந்த வருட உச்சிமாநாடு வளைகுடா நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டிய மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் ஜிசிசி உச்சி மாநாடு ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது:

« PREV
NEXT »