BREAKING NEWS
latest

Saturday, December 12, 2020

குவைத்தில் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்திய பல வாகனங்கள் பறிமுதல்:

Dec-12,2020

குவைத் போக்குவரத்து துறை பொறுப்பற்ற விதிமீறல் செய்யும் நபர்களுக்கு எதிராக  புகாரளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு மற்றும் தகவல் தொடர்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற போக்குவரத்து விதிமீறல் செயல்களை செய்த பல வாகனங்களை நேற்று(வெள்ளிக்கிழமை) கைப்பற்ற முடிந்தது என்று கூறியுள்ளது.

வெளியிட்டுள்ள அறிக்கையில் பாலைவனப் பகுதியில் ஒரு முகாமில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய செயல்களை செய்த பின்னர் வாகன உரிமையாளர்கள் தப்பி ஓடி தலைமறைவான நிலையில், போக்குவரத்து ரோந்துப் படையால் வாகனங்கள் பறிமுதல் செய்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறுப்பற்ற போக்குவரத்து செயல்களை செய்யும் நபர்கள் தொடர்பான புகார்களை போக்குவரத்து மற்றும் கட்டுபாட்டு துறையின் அவசர தொலைபேசியில் அனைவரையும் அழைத்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்காக 112 அல்லது WhatsApp யில் அழைத்து புகார் செய்யலாம் 99324092, குறுந்தகவலும் அனுப்பலாம்.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்திய பல வாகனங்கள் பறிமுதல்:

« PREV
NEXT »