BREAKING NEWS
latest

Wednesday, December 2, 2020

குவைத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் பிரதமர் திட்டவட்டம்:

குவைத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் பிரதமர் திட்டவட்டம்:


Dec-2,2020

குவைத்தில் நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் உட்பட அனைவரும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அறிவித்துள்ளார். இருப்பினும், நாட்டில் உள்ள  அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக பயன்படுத்த நிர்பந்தம் இல்லை எனவும், அது அவர்கள் விருப்பம்  என்று அவர் தெளிவுபடுத்தினார்.

குவைத்தில் உள்ள பல்வேறு துறைகளின் அமைச்சகங்களுக்கு இடையே இன்று நடந்த Open Force கூட்டத்தில் பிரதமர் பொது இதை தெரிவித்தார் என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் டிசம்பர்-5 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் சாதனைகளும் இந்த நிகழ்வில்  மதிப்பாய்வு செய்தனர்.

மேலும் அமெரிக்கா மருந்து நிறுவனமான ஃபைசர் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி இந்த மாத நடுப்பகுதியில் குவைத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதற்கு குவைத் சுகாதார அமைச்சகம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் முதல்கட்டமாக நாட்டில் உள்ள 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பாதி பேர் தடுப்பூசி பெற விரும்பவில்லை என்று  கருத்துகணிப்பு மூலம்  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கு தற்போதுள்ள தொற்று நோய் தடுப்பு  சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவை ஆகிறது. மேலும் இது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டாலும், டிசம்பர்-5 நடக்கும்  பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் தற்போதைய சுகாதாரத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடியும்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் பிரதமர் திட்டவட்டம்:

« PREV
NEXT »