BREAKING NEWS
latest

Tuesday, December 8, 2020

குவைத் ஜசீரா ஏர்வேஸ்,பயணிகளுக்கு குறைந்த கட்டண பி.சி.ஆர் பரிசோதனையை அறிமுகம் செய்துள்ளது:

குவைத் ஜசீரா ஏர்வேஸ்,பயணிகளுக்கு குறைந்த கட்டண பி.சி.ஆர் பரிசோதனையை அறிமுகம் செய்துள்ளது:

Dec-08,2020

குவைத் ஜசீரா ஏர்வேஸ் சற்றுமுன் தங்கள் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 22 தினார்கள் கட்டணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை பயணிகளுக்கு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

குவைத் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜரல்லா என்ற ஜெர்மன் சிறப்பு கிளினிக்குடன்(German Jarallah Specialist Clinic) இணைந்து, பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கொரோனா பரிசோதனையை வழங்கும்.

கோவிட் பிரசோதனை தொடர்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய 177 என்ற விமானத்தின் Helpline மையத்தை தொடர்பு கொள்ளலாம். ஜசீரா ஏர்வேஸ் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை வசதியை ஏற்படுத்தி கொடுக்கபடும் என்றும் ஜசீரா அறிவித்துள்ளது.

PCR சோதனைகளை பெறுவதற்கு jazeeraairways.com வலைத்தளம் மூலமாகவோ அல்லது ஜசீரா ஏர்வேஸ் Application ஐ பயன்படுத்தி பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.


 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் ஜசீரா ஏர்வேஸ்,பயணிகளுக்கு குறைந்த கட்டண பி.சி.ஆர் பரிசோதனையை அறிமுகம் செய்துள்ளது:

« PREV
NEXT »