BREAKING NEWS
latest

Sunday, November 22, 2020

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது:

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது:



Nov-22,2020

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தில் உள்ள மருந்துகள் கொள்முதல் துறையின் கோப்புகள் பாதுகாக்கப்படும் அறையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. வேலை நேரத்திற்கு முன்பே அறையில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் டாக்டர் பசில் அல்-சபா, மற்றும் துணை செயலாளர் டாக்டர் முஸ்தபா ரெடா கூறுகையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார். மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இருந்தபோதிலும் அமைச்சகத்தின் முக்கியமான ஆவணங்கள் இந்த தீ விபத்தில் அழித்ததா என்ற கூடுதல் தகவலும் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது:

« PREV
NEXT »