BREAKING NEWS
latest

Wednesday, November 18, 2020

குவைத்தில் பயங்கர தீ விபத்து;காணாமல் போன நபருக்கான தேடல் நடைபெற்று வருகிறது:

குவைத்தில் பயங்கர தீ விபத்து;காணாமல் போன நபருக்கான தேடல் நடைபெற்று வருகிறது:


Nov-18,2020

குவைத்தின் Shuwaikh மத்திய சந்தையில் இன்று  பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்பு துறையின் அவசரகால எண்ணுக்கு அதிகாலையில் 5:51 மணியளவில் அழைப்பு வந்துள்ளது.

விபத்தின் வீடியோ Link:https://fb.watch/1QARbwy_bb/

இதையடுத்து Al-Shuhada, Al-Ardiyah, Al-Madinah, Al-Salmiya மற்றும் Al-Isnad பகுதிகளில் இருந்து 6  தீயணைப்பு குழு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தனர், இதில் முதல் தீயணைப்பு குழு 4 நிமிடங்களில் தீவிபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து, அந்த  தீயணைப்பு குழுவினர் அண்டை கட்டிடங்களுக்கு தீ பரவாததால் தடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.

பின்னர் அடுத்தடுத்து வந்த மற்ற தீயணைப்பு குழு வீரர்கள் சுமார் 120 பேர் போராடி இந்த பயங்கரமான தீவிபத்தை அணைத்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஒருவர் உள்ளே இருந்தாக கூறப்பட்டுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு படையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் கலீத் ரக்கன் அல்-முகிரத் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைமை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

Editor:Ktpnews Official 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பயங்கர தீ விபத்து;காணாமல் போன நபருக்கான தேடல் நடைபெற்று வருகிறது:

« PREV
NEXT »