BREAKING NEWS
latest

Sunday, November 29, 2020

சவுதி மக்கா அருகே சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது:

சவுதி மக்கா அருகே சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது:

Nov-29,2020

சவுதியில் மக்கா புனித தலத்தின் அருகே
நான்காவது ரிங் சாலையில் ஒரு சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இறந்த பெண் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 24-வயதுடையவர் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது, மேலும் அவர் வேலைக்கு வரவில்லை என்று அவரது Sponsor(முதலாளி) போலீசார் விசாரணையில் தெரிவித்தார். இறப்புக்கான காரணங்களை கண்டறிய மக்கா Public Prosecution விசாரணை ஆவணங்களை பெற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் செய்தியில் வெள்ளிக்கிழமை மாலை  சாலை ஓரத்தில் பெரிய சூட்கேஸ் தரையில் கிடந்ததைக் கண்டுபிடித்ததாகவும், அதற்குள் என்ன இருக்கிறது என்று சோதித்தபோது, ​​இறந்த பெண்ணின் உடல் இருப்பது கண்டுபிடித்ததாகவும், இதையடுத்து மக்கா போலீசாருக்கு  குடிமகன் ஒருவர் தகவல் தெரிவித்ததாகவும் போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதி மக்கா அருகே சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது:

« PREV
NEXT »