BREAKING NEWS
latest

Friday, November 6, 2020

குவைத்தில் இன்று இரண்டு இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்:

குவைத்தில் இன்று இரண்டு இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்:




நவம்பர்-06,2020

குவைத்தில் இன்று வெள்ளிக்கிழமை 2 இந்திய தொழிலாளர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இரண்டு இந்தியர்கள் ஆந்திரா மாநிலம் திருப்பதி பகுதியைச் சேர்ந்த சேகர் எருவூரி வீரையா(வயது-36), சின்னய்யா மாதுரி (வயது-39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குவைத்தில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான Mahaboula கடற்கரையில் குளிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பத்ர் அல் முல்லா நிறுவனத்தில் மெக்கானிக் பிரிவின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்து காவல்துறை அதிகாரிகள் உடல் தடயவியல் நடைமுறைகளுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று இரண்டு இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்:

« PREV
NEXT »