BREAKING NEWS
latest

Friday, November 27, 2020

குவைத் உள்துறை அறிவிப்பு, இதை கண்டால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்:

குவைத் உள்துறை அறிவிப்பு, இதை கண்டால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்:

(Photo Official source)

Nov-27,2020

குவைத்தில் உள்துறை இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களிலும்  மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுத்தல் செய்துள்ளது.

 
(Photo Official source)

பல இடங்களிலும் மழையால் மண்ணுக்கு அடியில் புதையுண்டு கிடந்த கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டுகள் பல இடங்களில் இருந்தும்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

(Photo Official source)

இப்படி எதாவது உங்கள் கண்ணில் பட்டால் உடனடியாக உள்துறை அமைச்சகத்தின் 112 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக பாலைவன பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.

(Photo Official source)

இவை அனைத்தும் 1990 நாட்டில் நடந்த போரின்போது மண்ணில் புதையுண்டு வெடிப்பொருட்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மழை காலத்திலும் இதுபோல் வெடிப் பொருள்கள் தென்படுவது வழக்கம்.

(Photo Official source)

இதுபோன்ற வெடிபொருட்களில் சிக்கி கடந்த காலங்களில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் உள்துறை அறிவிப்பு, இதை கண்டால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்:

« PREV
NEXT »