BREAKING NEWS
latest

Saturday, November 14, 2020

குவைத் அரசு இந்தியர்கள் உள்ளிட்ட நாட்டவர்கள் தடை நீக்கினாலும்;குறைந்தது 300 தினார்கள் செலவாகும்:

குவைத் அரசு இந்தியர்கள் உள்ளிட்ட நாட்டவர்கள் தடை நீக்கினாலும்;குறைந்தது 300 தினார்கள் செலவாகும்:

நவம்பர்-14,2020

குவைத்தில் நுழைவு தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளுக்கு நேரடியாக நுழைவதற்கு அனுமதி அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை துவங்கியுள்ள நிலையில் "குவைத் சுற்றுலா பயணிகள் கூட்டமைப்பு'" தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக சுற்றுலா பயண கூட்டமைப்பின் தலைவர் முகமது அல் முத்தாரி தெரிவித்தார்.

குவைத்திற்கு திரும்ப விரும்புவோருக்கு, தேவையான விமான டிக்கெட்கள், தனிமைப்படுத்தப்பட்ட(Quarantine) வசதி, பி.சி.ஆர் பரிசோதனை, போக்குவரத்து, உணவு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒரு Package தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். இது நாட்டின் உள்ளூர் பொருளாதாரத்தை உற்சாகப்படுத்தும் என்று அவர் கூறினார்.  திரும்பும் பயணிகளுக்கு 5 சேவைகள் உள்ளடக்கிய Package தீர்மானிக்கப்பட்டுள்ளது

Package-யில் ஒரு வழி பயண டிக்கெட்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் நடத்தப்படும்  இரண்டு கட்ட பி.சி.ஆர் பரிசோதனை, விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மற்றும்  பி.சி.ஆர் மையத்திற்கு போக்குவரத்து மற்றும்  7 நாள் உணவு ஆகியவை இதில் அடங்கும். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு இந்த சேவைகளுக்காக 255 தினார் Package அறிவிக்க பயண நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது . அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 300 தினார் Package நிர்ணயம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து விமான டிக்கெட் விலையில் உள்ள வேறுபாடு இதற்குக் காரணம். மத்திய கிழக்கிலிருந்து குவைத் செல்லும் சராசரி டிக்கெட் விலை 70 தினார்கள். ஆனால் இந்தியாவில் இருந்து,இது சராசரியாக குறைந்தது 110 தினார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.குவைத்தில் தடை விதித்துள்ள நாடுகளின் நுழைவுத் தடையை நீக்குவதற்கான வழிமுறையாக விமான நிறுவனங்கள் சுகாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த திட்டங்களில் ஒன்று, இந்தியா உள்ளிட்ட நோய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை இரண்டு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதாகும். அப்படியானால், இரண்டு முறை பி.சி.ஆர் சோதனைக்கு 50 முதல் 80 தினார் வரை செலவாகும் என்று தெரிகிறது.

விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட மையம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு இரண்டாவது பி.சி.ஆர்  ஆய்வு இதற்கான போக்குவரத்துக்கான கட்டணம் 5 முதல் 10 தினார் வரை இருக்கும். மேலும் 7 நாட்கள் ஹோட்டல் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டால் சராசரியாக தினசரி வாடகை 15 தினார்கள். அப்படி என்றால் 7 நாட்களுக்கு 105 தினார் வரை செலவாகும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அறையைப் பகிர்ந்து கொண்டால், இந்த கட்டணத்தின் விலை குறையும். மேலும் டிராவல்ஸ் நிறுவனங்கள் வசதியான  ஹோட்டல்களில் தங்க விரும்புவோரின் 

தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பு Package தயார் செய்து உள்ளனர். மேலும்  டிராவல் ஏஜென்சிகள்  சில உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுடன் ஒரு வாரத்திற்கு மூன்று முறை ஹோட்டல் அறைகளுக்கு உணவை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதற்காக ஒரு நபருக்கு 25 தினார் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுருக்கமாக, நேரடியாக  நுழைவுத் தடையை குவைத் அரசு நீக்கினால் இந்தியாவில் இருந்து குவைத்துக்கு வரும் ஒரு பயணி விமானம் பயணச்சீட்டு உட்பட சுமார் 300 தினார்கள் வரையில் குறைந்தது செலுத்த வேண்டியிருக்கும். தடையை நீக்குவதன் மூலம்  பயணிகளின் வருகை அதிகரித்தால் பயணச்சீட்டு கட்டணங்களின் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சங்கள் உள்ளன, இது தற்போது துபாய் வழியாக குவைத் வருபவர்கள் செலவு செய்யும் அதே விகிதத்தில் இருக்கும் என்று டிராவல் ஏஜென்சி துறையில் உள்ளவர்கள் கருதுகின்றனர்.

Editor: Ktpnews Official 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் அரசு இந்தியர்கள் உள்ளிட்ட நாட்டவர்கள் தடை நீக்கினாலும்;குறைந்தது 300 தினார்கள் செலவாகும்:

« PREV
NEXT »