BREAKING NEWS
latest

Wednesday, November 4, 2020

கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தவும், இந்தியர்கள் பணிக்கு திரும்புவதற்கு வழிவகை செய்ய அமைச்சர் வலியுறுத்தல்:

கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தவும், இந்தியர்கள் பணிக்கு திரும்புவதற்கு வழிவகை செய்ய அமைச்சர் வலியுறுத்தல்:



நவம்பர்-04,2020

கோவிட் -19 தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வேலைக்கு திரும்புவதற்கு   விரும்பும் இந்தியர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) உறுப்பினர்களை இந்திய வெளியுறவுத்துறை கேட்டுள்ளது என்று பி.டி.ஐ செய்திகள் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர் அதாவது  வேலை செய்கிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் வளைகுடாவின் கீழ் உள்ளனர், இதில் குவைத், பஹ்ரைன், ஓமான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை அடங்கும்.

ஜி.சி.சி நாடுகளுடனான இந்தியாவின் ராஜதந்திர உறவுகள் குறித்த உரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஏராளமான இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இப்போது மீண்டும் ஜி.சி.சி நாடுகளுக்குத் திரும்பி தங்கள் பணியைத் தொடங்க ஆர்வமாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான நிலையான பயணக் குமிழி(Travel Bubble) ஏற்பாடுகள் மூலம் அவர்கள் திரும்புவதற்கு வழிவகை செய்ய ஜி.சி.சி தலைமையை ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

கொரோனா தொற்று நோய்களின் போது பெரிய அளவிலான  இந்திய புலம்பெயர்ந்தோரை கவனித்துக்கொண்டதற்காக ஜி.சி.சி நாடுகளுக்கு   நன்றி தெரிவித்த அவர், ஜி.சி.சி நாடுகளுக்கு இந்தியாவை சேர்ந்த சுகாதார ஊழியர்கள்(வளைகுடா நாடுகளில் சுகாதாரத்துறை யின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இந்தியர்கள்) பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய இந்தியா சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தவும், இந்தியர்கள் பணிக்கு திரும்புவதற்கு வழிவகை செய்ய அமைச்சர் வலியுறுத்தல்:

« PREV
NEXT »