BREAKING NEWS
latest

Monday, November 23, 2020

குவைத்தில் வாகனத்தின் நிழல் ஸ்டிக்கர்களை அளவிட புதிய கருவி;10 தினார்கள் அபராதம்:

குவைத்தில் வாகனத்தின் நிழல் ஸ்டிக்கர்களை அளவிட புதிய கருவி;10 தினார்கள் அபராதம்:


Nov-23,2020

குவைத்தில் வாகன நிழல் ஸ்டிக்கர் தடிமன் அளவிடுவதற்கான புதிய அதிநவீன சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  தற்போது வாகன பக்க ஜன்னல்களின் நிழல் ஸ்டிக்கர்கள் வீதம் 30% ஆகும் என்று கடைபிடிக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் குவைத் போக்குவரத்து விழிப்புணர்வு துறையின் தலைவரான நவாஃப் அல்-ஹயான், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த விகிதம் 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

வாகனத்தின் முன் மற்றும் பின்புற ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள், பிரதிபலிப்பு நிழல் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது மற்றும் வாகனங்களின் ஜன்னல்கள் திரை கொண்டு மூடுதல் ஆகியவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மீறுபவர்களுக்கு 10 தினார் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து செய்தி அதிகாரபூர்வமாக தளத்தில் செய்தியாக வெளியிப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வாகனத்தின் நிழல் ஸ்டிக்கர்களை அளவிட புதிய கருவி;10 தினார்கள் அபராதம்:

« PREV
NEXT »