BREAKING NEWS
latest

Tuesday, October 27, 2020

உலகின் மிக சிறந்த, மிக மோசமான நாடுகள் பட்டியலில் குவைத், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது:

உலகின் மிக சிறந்த, மிக மோசமான நாடுகள் பட்டியலில் குவைத், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது: 

அக்டோபர்-26,2020

வெளிநாட்டினர் வாழ்வதற்கு மிகவும் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் முக்கிய இடங்களில் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆசியா நாடுகள் மறுமுனையில் 10 இடங்களில்  8 இடங்களை தக்கவைக்க தவறிவிட்டது.

181 நாடுகளில் வாழும் 173 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் internations Organisation அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியலில் வெளியாகியுள்ளது.

இதில் குவைத், எகிப்து, பிலிப்பைன்ஸ் இந்தியா உள்ளிட்ட மேலும் பல நாடுகள் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டினர் வாழ்வதற்கு சிறந்த இடமாக பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.

60 நாடுகள் பட்டியலில் 59, 60-வது இடங்களை குவைத் மற்றும் இந்தியா பிடித்து  கடைசி இரண்டு இடங்களில் உள்ளது. மோசனா 10 நாடுகளிலும் கடைசி 2 இடங்களில்  குவைத் மற்றும்  இந்தியா உள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

வளைகுடா நாடுகளை பொறுத்த வரையில் ஓமன் 21-வது இடத்திலும், அமீரகம் 22-வது இடத்திலும், பஹ்ரைன் 29-வது இடத்திலும், சவுதி 49-வது இடத்திலும் உள்ளது.

மேலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா 19 மற்றும் 40 இடங்களில் உள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to உலகின் மிக சிறந்த, மிக மோசமான நாடுகள் பட்டியலில் குவைத், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது:

« PREV
NEXT »