BREAKING NEWS
latest

Tuesday, October 27, 2020

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார்:

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார்:

அக்டோபர்-27,2020


குவைத்தில் டொமினிக் சாக்கோ(வயது-37) என்ற இந்திய இளைஞர் மாரடைப்பால் (25/10/20)அன்று அப்பாசியாவில் உள்ள அவரது குடியிருப்பில்  உயிரிழந்தார். அவர் குவைத்தில் உள்ள ஆசிகோ நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கேரளா மாநிலம் கொல்லம் ஆயுர் பகுதியைச்  சேர்ந்தவர் ஆவார். இன்று(27/10/2020) குவைத் ஏர்வேஸ் விமானத்தில் உடல் இந்தியா எடுத்து செல்லப்படுகிறது. இவருடைய உடலை தாயகம் அனுப்பும் பணிகளை கலா குவைத் அமைப்பு பிரதிநிதிகள், தூதரகத்துடன் இணைந்து செய்தது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடலை விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல (வெளிநாடுகளில் மரணமடையும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அமைப்பு) கேரளா அரசின் இலவச நோர்கா ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தந்தை பெயர் சாக்கோ, தாய்: மரியம்மா, மனைவி: சினி, குழந்தைகள் அன்னா மற்றும் மரியம், சகோதரர்கள்: டென்னிஸ்(கலை குவைத் உறுப்பினர்) மற்றும்  பென்னி ஆகியோர்.


  

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார்:

« PREV
NEXT »