BREAKING NEWS
latest

Thursday, October 22, 2020

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவும் பயணி ஒருவர் தங்கத்துடன் சிக்கியுள்ளார்:

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவும் பயணி ஒருவர் தங்கத்துடன் சிக்கியுள்ளார்:

அக்டோபர்-22,2020


சென்னை விமான நிலைய சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் புதன்கிழமை(நேற்று) இரவு AI IX1644 விமானம் மூலம் துபாயிலிருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 114 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.


மேலும் அந்த செய்தியில் இதில் 20 கிராம் தங்கம் கட்டியாக பேன்ட் பாக்கெட்டிலும் , 2 தங்கப்பசை உருளைகளாக ஆசணவாயிலும் மறைத்து வைத்திருந்தார் (94 கிராம்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பயணி  கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவும் பயணி ஒருவர் தங்கத்துடன் சிக்கியுள்ளார்:

« PREV
NEXT »