BREAKING NEWS
latest

Monday, October 26, 2020

குவைத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய செவிலியர் மரணமடைந்தார்:

குவைத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய செவிலியர் மரணமடைந்தார்:

அக்டோபர்-25,2020


குவைத்தில் வேலை செய்து வந்த இந்திய கேரளா மாநிலம் பதானம்திட்டா, றாநி பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் வர்கீஸின் இவருடைய  மனைவி மரியம்மா-உம்மன்(வயது-50) இன்று காலை குவைத் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலையில் மரணமடைந்தார்.

அவர்கள் கடந்த சில நாட்களாக இங்கு  புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மரியம்மா சபா மருத்துவமனையில் குழந்தை வார்டில் செவிலியராக சேவையாற்றி வந்தார். இந்நிலையில புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உடலை திருப்பி தாயகம் அனுப்பும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தம்பதிகளுக்கு  ஆலன் மற்றும் ஆண்ட்ரியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர்கள் குவைத்  இந்தியன் சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய செவிலியர் மரணமடைந்தார்:

« PREV
NEXT »