BREAKING NEWS
latest

Saturday, October 24, 2020

குவைத்தில் எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் தொடர் ஏமாறும் தமிழக உறவுகள்:

குவைத்தில் எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும்  தொடர் ஏமாறும் தமிழக உறவுகள்:


குவைத்தில் வங்கி கடன் பெற்று தருவதாக வட இந்திய நபர் ஒருவர் பேச்சை நம்பி சிவில் ஐடியை கொடுத்து ஏமாந்த பரிதாபமான செய்தி அந்த நபரே நேரடியாக கூறியுள்ளார். இவருடன் சேர்ந்து இவருடன் வேலை செய்யும் மற்றோரு நபரும் ஏமாந்தது தெரியவந்துள்ளது 

இவர்கள் சிவில் ஐடி பயன்படுத்தி விலையுயர்ந்த கைபேசிகள், Router மற்றும் மடி-கணினி  உள்ளிட்ட பல பொருளை வாங்கி ஏமாற்றியது தற்போது தான் அவர்களுக்கே தெரியவந்துள்ளது. மேலும் வங்கி கடன் எதுவும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியது மேலும் சோகம். 

இவர்கள் இரண்டு பேர் மீதும் தற்போது பெரிய தொகை அபராதத்துடன நிலுவையில் உள்ளது. இதனால் தாயகம் திரும்புவதற்கு முடியாத நிலையில். வருடங்கள் வேலை செய்தாலும் இவர்களால் இந்த தொகையை கட்ட இயலாது.இதுபோல் இதற்கு முன்னும் பலர் ஏமாந்துள்ளனர் என்று முகத்திரையை தங்கள் அனுபவங்களை பலர்  பகிர்ந்தும் ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

தயவு செய்து எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் சிவில் ஐடி மற்றும் பாஸ்போர்ட் கொடுக்காதீர்கள். உங்கள் ஆவணங்கள் பயன்படுத்தி யாருக்கும் எந்தவொரு பொருளும் தவனை  முறைகளில் வாங்கி வழங்காதீர்கள். அது உங்களுக்கே பெரிய பிரச்சினையாக வந்து நிற்கும்.

இதுபோல் உங்கள் சிவில் ஐடி பயன்படுத்தி சிம் கார்டு  எடுத்து கொடுக்காதீர்கள். உங்கள் அடையாள அட்டை பயன்படுத்தி எடுக்கும் சிம் கார்டு அவர் தவறாக பயன்படுத்தினால் அதற்கும் நீங்கள் வழக்குகள், சிறை தண்டனை, குறிப்பாக போதை பொருள் உள்ளிட்ட குற்றங்களில் சிக்கினால் அத்துடன் உங்கள் வாழ்கை முடிந்து விடும் 

எச்சரிக்கை..... சிலர் என்ன வர போகுது என்று சாதாரணமாக  இருப்பார்கள். வளைகுடா போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனையில் சிக்கி பாருங்கள். பிரச்சினை வராத வரையில் எதுவும் இல்லை. நாம் எதற்காக அங்கு சென்றோம் என்பதை மறந்து விட வேண்டாம்,பல மறந்து விடுகிறார்கள். நாட்டில் உள்ள திமிர் தெனவெட்டு எல்லாம் அங்கு எடுத்தால் அவ்வளவுதான் வாழ்க்கை.....

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் தொடர் ஏமாறும் தமிழக உறவுகள்:

« PREV
NEXT »