BREAKING NEWS
latest

Thursday, October 22, 2020

குவைத்தின் சூக்-முபரகியா முழுமையாக திறக்கப்பட்டது;அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன:

குவைத்தின் சூக்-முபரகியா முழுமையாக திறக்கப்பட்டது;அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன:

அக்டோபர்-22,2020

குவைத்தில் ஒருவர் வந்து சென்றிருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் ஒரு முறையாவது சூக்-முபராகியா சந்தையை சுற்றி பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்து. பின்னர் பகுதி கட்டுப்பாடுகளுடன் ஜூலை முதல் சந்தை திறந்திருந்தது. ஆனால் இப்போது அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து   சூக்-முபராகியா சந்தை முழுமையாகவும் எந்த தடையும் இன்றி திறந்துள்ளது.

ஷாப்பிங் அல்லாத பிற தேவைகளுக்கு  நீங்கள் சந்தைக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் செல்லும்  பார்வையாளர்கள் கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

முபரக்கியாவின் அனைத்து வாயில்களும் இப்போது திறக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலில் வெப்பநிலையை சரிபார்த்து, சமூக தூரத்தை கடைபிடிக்கும்  மக்களை கண்காணிப்பதாக பாதுகாப்பு காவலர்கள் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  சூக் முபராகியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரிடையே ஒரு பிரபலமான ஷாப்பிங் இடமாகும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் சூக்-முபரகியா முழுமையாக திறக்கப்பட்டது;அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன:

« PREV
NEXT »