BREAKING NEWS
latest

Monday, October 19, 2020

குவைத்தில் நபிதினத்தை முன்னிட்டு அக்டோபர் 29 அரசு விடுமுறை:

குவைத்தில் நபிதினத்தை முன்னிட்டு அக்டோபர் 29 அரசு விடுமுறை:


குவைத்தில் வருகின்ற அக்டோபர்-29 வியாழக்கிழமை நபிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை என்று குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் சற்றுமுன் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.



அந்த அறிக்கையில் அரசு துறை சார்ந்த ஊழியர்களுக்கு வருகின்ற அக்டோபர்-29 முதல் (வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும்) மேலும் தனியார் துறை அலுவலக ஊழியர்களுக்கு இதுபோல் மூன்று நாட்களும், தொழிலாளர்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையாக இருக்கும்.

அரசு அலுவலகங்கள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை  நவம்பர்-1 மீண்டும் வேலை நாளாக இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நபிதினத்தை முன்னிட்டு அக்டோபர் 29 அரசு விடுமுறை:

« PREV
NEXT »