BREAKING NEWS
latest

Thursday, October 3, 2019

சவுதியும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் கடைசியாக ஆதரவு தெரிவித்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

சவுதியும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் கடைசியாக  ஆதரவு தெரிவித்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது 



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.
சவுதி சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இளவரசர் முகமது பின் சல்மான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொசைத் அல் அல்பான் ஆகியோரை (Saudi counterpart Musaid Al Alban)  சந்தித்து பேசினார்.

சவுதி இளவரசருடன் சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இளவரசர் விடுத்துள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகள், அணுகுமுறைகளை புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சிகள் எடுத்து வந்தனர். அதன் விளைவாக, ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு அந்நாடு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல்  இந்தியாவின் நடவடிக்கைக்கு இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் முன்னரே ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தற்போது மாலத்தீவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாலத்தீவு நாட்டின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்திய அரசில் சட்டத்தின் 370-வது பிரிவு தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். இறையாண்மை உள்ள எந்த ஒரு நாடும் சட்டங்களை திருத்தும் மாற்றவும் உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த ரஷ்ய அரசு இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலி குட்சேவ் இது தொடர்பாக கூறும்போது, ‘காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம். அதில் நாங்கள் தலையிடமாட்டோம். காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

உண்மையான தகவல்களை ஆய்வு செய்ததில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை இந்திய அரசு ரத்து செய்ததும், அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்ததும், அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்தியா செய்துள்ளது என்றும்

இதுபோல் அமெரிக்காவும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் இதில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் ஈரான்  தலைவர் அயத்துல்லா அலி காமெனி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஈரானுக்கு இந்தியாவுடன் நல்ல நட்பு  இருக்கிறது. இருப்பினும், இந்திய அரசு காஷ்மீரில் வசிக்கும் உன்னத மக்களுக்காக சிந்திக்க வேண்டும் என்றும், காஷ்மீரின் தற்போதையை நிலை மற்றும் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல்கள் ஆகியவை இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும்போது, பிரிட்டிஷ் அரசு எடுத்த மோசமான நடவடிக்கைகளின் விளைவே ஆகும். காஷ்மீருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தவே, இந்த காயத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச் சென்றது என்று நடுநிலையான கருத்து
கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் விவகாரம் தொடர்பாக சீனா, துருக்கி, மலேசியா அதிபர்களிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருந்தார். மேலும் கடந்த சில வாரங்களில் பாகிஸ்தானின் ராஜதந்திர முயற்சிகள் மூலம் சீனா, மலேசியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் ஆதரவை அவர்பக்கம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடதக்கது.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் கடைசியாக ஆதரவு தெரிவித்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »