BREAKING NEWS
latest

Wednesday, October 2, 2019

குவைத்தில் இந்திய தமிழக நபர் வேலை இடத்தில் விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்திய தமிழக நபர் வேலை இடத்தில் விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் வேலை பார்த்து வந்த இந்திய தமிழகம் திருச்சி மாவட்டம், குளமாணிக்கம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஷர்ஃபுத்தீன், இவர் இன்று( 02 /10/19) புதன்கிழமை மரணம் அடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இவர் குவைத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையின் பொருளாளர் சிராஜூதீன் அவர்களின் அண்ணன்  ஆவார், ஷர்ஃபுத்தீன் அவர்கள் குவைத்தில் இஞ்சினியராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பணியிடத்தில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார் என்று செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (04.10.2019) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, குவைத்தில் உள்ள கைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் வைத்து அவருக்கு இறுதியாக சிறப்பு பிரார்த்தனை(சிறப்பு துஆ மஜ்லிஸில்) நடைபெறும். குவைத் வாழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷர்ஃபுத்தீன் உடல் குவைத் சட்ட நடவடிக்கை முடிந்த பிறகு குவைத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்றும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News Reporting by:

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)










WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய தமிழக நபர் வேலை இடத்தில் விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »